சுட்டுத்தள்ளிய பொலிசாருக்கு ஆபத்தில் உதவிய போராட்டக்காரர்கள்: வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பான படங்கள் பார்ப்பவர்களின் மனதை உருகுலைய வைக்கிறது.

17 வயது பள்ளி மாணவி வாயில் சுடப்பட்டு இறந்துள்ளார். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தப் போராட்ட களத்தின் நடுவே கல்வீச்சில் காயமடைந்த காவலர் ஒருவருக்கு பொதுமக்கள், இளைஞர்கள் உதவிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. தலையில் ரத்தம் வழிய துடித்துக் கொண்டிருந்த பொலிசாருக்கு அருகில் இருந்தவர்கள் உதவியுள்ளனர்.

காயமடைந்த காவலரை இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து தூக்கிக் கொண்டு மருத்துவ உதவி செய்யக்கொண்டு சென்றனர். இத்தகைய உதவும் மனப்பான்மை உள்ள மக்களை சுடுவதற்கு எப்படிதான் மனம் வந்ததோ அவர்களுக்கு என சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers