தலைமுறைகளாக வாழ்ந்த பூமியை இழக்கும் குடும்பங்கள்! நிலம் அளக்கப்பட்ட போது மயங்கி விழுந்த பெண்மணி

Report Print Trinity in இந்தியா

சேலம் 8 வழி சாலைக்காக அங்குள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு வனங்களும் மலைகளும் ஆறுகளும் அழிக்கப்படுகின்றன என்று சேலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயத்தை அழித்து பசுமை சாலை அவசியமா என்று அங்குள்ள அனைவரும் கதறியும் தமிழக அரசு தொடர்ந்து அதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகின்றது.

நிலத்திற்குரியவர்களின் சம்மதமின்றி நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. எதிர்த்து கேள்வி கேட்போரை அரசாங்கம் கைது செய்து விடுகிறது.

இப்படி இருக்கையில் சீரிக்காடு எனும் பகுதியில் ஒரு குடும்பத்தாரின் வீடு, கிணறு மற்றும் விளைநிலம் ஆகியவை அவர்கள் அனுமதி இன்றி கையகப்படுத்தப்பட்டது.

தங்கள் குடும்பத்தின் மொத்த சொத்துக்களும் பறிபோவதை அறிந்து அந்த குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.

தலைமுறைகளாக வாழ்ந்த தங்கள் வீடும் நிலமும் கைவிட்டு போன அதிர்ச்சியில் தனலட்சுமி எனும் பெண்மணி மயங்கி விழுந்தார்.

அந்த நிலத்தில் அரசாங்கத்தினர் முட்டுக்கல் ஊன்றியபோது ஒட்டு மொத்த குடும்பமும் கதறி அழுதது அங்குள்ளோரின் நெஞ்சை நனைத்தது.

இருப்பினும் அடுத்தவர் வலியை உணராத அரசாங்கத்தின் காதுகளில் சில குரல்கள் விழுவதேயில்லை.. சில கண்ணீர்துளிகள் அதிகாரத்தில் ஊறியவர்களை நனைப்பதுமில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...