பொலிசாருக்கு இலவசமாக காய்கறிகள் வழங்காததால் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!!

Report Print Vijay Amburore in இந்தியா

பீகாரில் பொலிஸாருக்கு இலவசமாக காய்கறிகள் வழங்காததால் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மார்ச் 19-ம் தேதி, பொலிஸாருக்கு இலவசமாக காய்கறிகள் வழங்காததால், 14 வயது சிறுவனை இருசக்கர வாகன திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்து, 3 மாதம் 3 நாட்களாக சிறையில் வைத்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் நிதிஷ்குமார், விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி மனு மஹராஜ் கூறுகையில், இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாகவும், சம்பவம் நடந்ததற்கான எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விரைவில் சிறுவனின் குடும்பத்தினரை விசாரிக்க உள்ளதாகவும், இதில் யார் தவறு செய்திருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் மகனின் கைது குறித்து கூறியுள்ள சுக்பால் சிங், எனது மகனுக்கு 14 வயது தான் என ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பொலிசார் 18 வயது என கூறி பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மகனை விடுவிக்க அரசு விரைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers