பூஞ்சாண்டிக்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்: ஆளுநரை விமர்சித்த துரைமுருகன்

Report Print Vijay Amburore in இந்தியா

நாமக்கல் ஆய்வு குறித்து ஆளுநர் விளக்கம் கொடுத்திருந்த நிலையில், ஆளுநர் பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயன்படாது என துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் பதவியேற்றத்திலிருந்தே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கருத்து கேட்டு வருகிறார்.

அவருடைய இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் பலரும் தொடர்ந்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் ஆய்வு மேற்கொள்ள வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியதற்காக, திமுக உறுப்பினர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டதாலே அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஆளும் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

மேலும், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது எனவும், மாநிலத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லும் உரிமை ஆளுநருக்கு உள்ளது எனவும் ஆளுநர் தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டது.

இந்த நிலையில் ஆளுநரின் விளக்கம் குறித்து பதிலளித்த திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆளுநரின் பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயன்படாது எனவும், அவர் எங்கு சென்றாலும் கறுப்புக்கொடி காட்டப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்