16 வயது சிறுமியை 32 வயது நபருக்கு தாய் திருமணம் செய்து வைத்தது ஏன்? உறவினர்கள் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் 16 வயது சிறுமியை தாய் 32 வயது நபருக்கு தாய் ஏன் திருமணம் செய்து வைத்தார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரின் மகன் காந்தி கண்ணனுக்கும்(32) திருச்சி மாவட்டம் துறையூர் காமராஜர் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் நேற்று திருச்சியில் உள்ள ஸ்ரீரங்க கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

சிறுமிக்கு திருமணம் நடைபெறவுள்ள என்ற தகவலை அறிந்த திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் இவர்கள் செல்வதற்குள் மணமக்கள் சென்றுவிட்டதால், மணப்பெண்ணின் பெற்றோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் மணப்பெண்ணுக்கு 19 வயதாகிவிட்டது என்று கூறியுள்ளனர். இருப்பினும் சந்தேகமடைந்த பொலிசார் மணப்பெண் படித்த பள்ளியை தொடர்பு கொண்டு, அவரது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்படி மின்னஞ்சலில் பள்ளியிலிருந்து மதிப்பெண் சான்றிதழ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதிப்பெண்

சான்றிதழை பார்த்த போது, மணப்பெண்ணின் பிறந்த தேதி 31.12.1998 என்று மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குழந்தை திருமணம் என்பது உறுதியானதால் இதற்கு காரணமான மணமக்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

அதன் பேரில் மணமகன் காந்தி கண்ணன், அவரது தாய் சரோஜா, மணப்பெண்ணின் தாய் ஜெயந்தி, உறவினர் ராஜகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், ஜெயந்தியை மட்டும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், சிறுமியின் தந்தை உயிருடன் இருக்கும் போது லட்சக்கணக்கில் கடன் வாங்கி விட்டு இறந்துள்ளார்.

இதனால் 30 லட்சம் ரூபாய் கடனில் சிக்கி தவித்த ஜெயந்திக்கு மணமகன் காந்தி உதவியுள்ளார். அதற்கு ஈடாக ஜெயந்திக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். அந்த பழக்கத்தில் ஜெயந்தியின் மகளையும் திருமணம் செய்து கொண்டார் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்