22 வயது பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்த 40 பேர்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in இந்தியா

சமீபத்தில் 17 பேர் சேர்ந்து சென்னையில் ஒரு பெண்ணை சீரழித்த செய்தி வெளியாகிய நிலையில், ஹரியானாவில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் வைத்து 22 வயது பெண்ணை 40 பேர் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்கள் அந்த கெஸ்ட் ஹவுஸில் அந்த இளம்பெண்ணை அடைத்து வைத்து சித்திரவதை செய்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பினார்.

Morni என்னும் இடத்தில் அமைந்துள்ள அரசு கெஸ்ட் ஹவுஸில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த கெஸ்ட் ஹவுஸ் ஒதுக்கமான ஒரு இடத்தில் அமைந்துள்ளதால் நடந்த சம்பவம் யாருக்கும் தெரிய வரவில்லை.

அந்த கெஸ்ட் ஹவுஸின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்