திருமணத்திற்கு விவரங்களை இதில் பதிவிட்ட விமான பணிப் பெண்! ஆபாச தளத்தில் மாட்டிவிட்ட இளைஞன்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்ததால், அவரது பெயரை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டதாக இளைஞர் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள சர்வதேச விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணி புரிபவர் ரீட்டா. இவர் தன்னுடைய திருமணத்திற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தன் விவரங்கள், குடும்ப பின்னணிகள் மற்றும் தன்னுடைய மொபைல் எண் போன்றவைகளை பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்ட 29 வயது மதிக்கத்தக்க நபர் உடனடியாக ரீட்டாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவரை ரீட்டாவிற்கு மிகவும் பிடித்துள்ளது.

இதையடுத்து இருவரின் குடும்பத்தினரும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பின் இருவரின் திருமண நிச்சயதார்த்தமும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த இளைஞர் திடீரென்று ரீட்டாவின் செல்போன் அழைப்புகளை தவிர்த்துள்ளார். இதனால் குழம்பிய நிலையில் ரீட்டா இருந்த போது, அவரின் பெற்றோர் உன்னுடைய நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது, இனி அந்த இளைஞனுக்கு போன் செய்யாதே என்று கூறியுள்ளனர்.

இந்த பிரச்சனை முடிந்து நாட்கள் சென்ற நிலையில், ரீட்டாவின் போனிற்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்துள்ளன. அவர்கள் அனைவரும் உங்களின் விலை என்ன என்றே கேட்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த ரீட்டா இது குறித்து விசாரித்த போது, வசந்த் தான் இந்த வேலையை எல்லாம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது ஆபாச இணையதளம் ஒன்றில் வசந்த், ரீட்டாவின் புகைப்படம் மற்றும் அவரது செல்போன் எண்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரீட்டா இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது வசந்த், நான் ரீட்டாவை ஒரு போதும் திருமணம் செய்ய விரும்பவில்லை எனவும் அவருடன் நான் டேட்டிங் செய்யவே ஆசைப்பட்டதாகவும், ஆனால் அவர் என்னை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்ததால், இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

விசாரணைக்கு பின் பொலிசார் ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ரீட்டாவின் விவரங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்