தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபரின் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி

Report Print Santhan in இந்தியா

பிரபல நடிகையான ஸ்ருதி திருமணம் செய்து கொள்ளும் படி மிரட்டிய நபர் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நடிகை ஸ்ருதி, சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார்.

ஜாமினில் வெளி வந்த அவர், தன் மீது பண மோசடி புகார் கொடுத்த நபர் தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

அதில் அவர், தான் பண மோசடி செய்துவிட்டதாக கூறிய அமுதன் தன்னை காதலிக்க வற்புறுத்தி தற்கொலை செய்துகொள்வேன் மிரட்டினார்.

நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளதாக ஸ்ருதி கூறியுள்ளார்.

மேலும் அவர் என் மீது போடப்பட்ட வழக்குகள் திட்டமிட்ட சதி எனவும், நான் இதை எல்லாம் சட்ட ரீதியாக பார்த்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ருதி பொலிசார் என்னை விசாரிக்க அழைத்துச் சென்ற போது பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்