இந்த கஷ்டத்திலும் கேரள மக்களுக்காக கருவாடு விற்கும் நபர் செய்த நெகிழ்ச்சி செயல்! என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருவாடு விற்கும் நபர் நிதியுதவி அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிகள் சென்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ராமேஷ்வரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.

இவருக்கு இரண்டு மகன், ஒரு மகன் உள்ளனர். பெரிய விசைப்படகுக்கு செல்வோர் பயன்படுத்தும் சிறிய படகை கொண்டு, குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டிவருகிறார்.

அதுமட்டுமின்றி மீன்களை வாங்கி அதை கருவாடாக்கி சில்லறை விற்பனையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளத்தால், பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக இவர் தனது உண்டியல் சேமிப்புத்தொகையாக வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை தனியார் தொலைக்காட்சியின் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

கஷ்டமான பொருளாதார சூழ்நிலையில் இருந்த போதும், இவரின் செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers