100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி!

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் திபு போஸ் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

ஒடியா திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற போஸுக்கு ஏற்கனவே இரண்டு முறை முன்னர் மாரடைப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் போஸ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் நேற்று பிரிந்தது.

130 திரைப்படங்களில் நடித்துள்ள போஸின் திடீர் மறைவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்