இதய நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுமி கேரள பேரிடருக்கு அளித்த நிதி உதவி: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமி சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை கேரள பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

கரூர் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இதய நோயால் அவதிப்பட்டுவரும் இவரது 12 வயது மகள் அக்‌ஷயா, கடந்த ஆண்டு சமூக வலைதளத்தின் உதவியால் சுமார் 3 லட்ச ரூபாய் திரட்டி அப்பல்லோ மருத்துவமனையில் முதற்கட்ட அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக சமூக வலைதளங்கள் மூலம் அக்‌ஷயாவிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுவரை அக்‌ஷயாவின் அறுவை சிகிச்சைக்காக 20,000 ரூபாய் வரை நிதி பெறப்பட்டிருக்கிறது.

இதனிடையே கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைப் பார்த்த அக்‌ஷயா தன்னுடைய அறுவை சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20,000த்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை நிதி உதவியாக கேரளாவிற்கு அளித்திருக்கிறார்.

இதுதொடர்பில் அக்‌ஷயாவின் தாயார் ஜோதிமணி, அத்யாவசிய தேவை காரணமாக நிதி உதவி கேட்பது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத் தெரியும்.

அதனால் அக்‌ஷயா உதவி செய்கிறேன் என்று கேட்கும் போது என்னால் மறுப்பேதும் கூற இயலவில்லை என்று கூறியுள்ளார்.

அக்‌ஷயாவின் சிகிச்சைக்காக 2.5 லட்சம் தேவை என்கிற நிலையில் அவர் அளித்திருக்கும் நிதி உதவி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்