மாற்றுதிறனாளியின் தூசியை எடுத்து நெற்றியில் பூசிய நடிகர் கமல்ஹாசன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மக்களுடனான பயணமாக திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

காங்கேயம் கூட்டத்தில் மக்களிடம் அவர் பேசுகையில், எத்தனையோ கட்சிகள் உங்க குறைகளைக் கேட்டு விட்டு போயிருக்கிறார்கள். அது நிவர்த்தி செய்யப்பட்டதா என்று நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதற்கான விடையைத் தேட மக்கள் நீதி மையம் எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை எதற்காக தொகுத்து வழங்குறீர்கள்? முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டியதுதானே என கேட்கிறார்கள். அவரவருக்கு என்று ஒரு தொழில் வேண்டும். அரசியலை தொழிலாக்கக் கூடாது. அரசியல் தொழில் ஆனதால் தான் அதை விடாமல் வியாபாரமா செய்கிறார்கள் பலர். நமக்கு அரசியல் தொழில் அல்ல என்று கூறியுள்ளார்.

அக்கூட்டத்தில் ஒரு குழந்தைக்கு 'ராஜபவித்ரன்' என்று அக்குழந்தையின் தந்தை 'ராஜா', தாய் ' பவித்ரா' பெயர்களைச் சேர்த்து பெயர் வைத்தார்.

பின் மேடையருகே கைகளை ஊன்றி நடந்து வந்த மாற்றுத்திறனாளி இளைஞருடன் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் கைகளில் படிந்த தூசியை 'வெற்றித்திலகம்' என்று கூறி நெற்றியில் இட்டுக் கொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers