நடிகர் அருண்விஜயின் பேச்சைக் கேட்டு என் அப்பா ஆடுகிறார்! அடித்து வெளியேற்றியதாக நடிகை வனிதா வேதனை

Report Print Santhan in இந்தியா

திரைப்பட நடிகையான வனிதா பொலிசார் தன்னை அடித்து துன்புறுத்தி வெளியேற்றியதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாகத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஏராளமான அறைகள் கொண்ட இந்த பங்களா அவ்வப்போது சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதாவுக்குப் படப்பிடிப்புக்காக கொடுத்துள்ளார்.

ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா, வீட்டை காலி செய்யாமல் இருந்து வருவதாக கூறி நடிகர் விஜயகுமார் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் காரணமாக இன்று ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து வனிதா காலை வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த வனிதா, வீட்டை காலி செய்யுமாறு என் அப்பா விஜயகுமார் மிரட்டினார். வேறு வாடகை வீட்டிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

25,000 சதுர அடி அளவு கொண்ட வீட்டில் நான் வெறும் 1000 சது அடி அளவு உள்ள இடத்தில் இருந்தால் என்ன? வீட்டில் இப்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் என் தந்தை விஜயகுமார் என்னை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். ஏற்கனவே நான் 1995 களில் நடித்து நான் ஈட்டிய பொருளும் இந்த வீடு கட்டுவதற்கு உதவியுள்ளது.

அப்படியிருக்கும்போது நான் இந்த வீட்டில் இருக்க உரிமை இருக்கிறது. ஆனாலும் பொலிசார் என்னை அடித்து துன்புறுத்தி வெளியேற்றினர்.

நான் கடன் வாங்கி படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அருண்விஜய் மற்றும் ஹரியின் பேச்சைக் கேட்டு அப்பா விஜயகுமார் ஆடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers