விபத்தில் துண்டான சிறுவனின் கால்கள்... 8 மணி நேரம் போராடிய மருத்துவர்கள்: வெளியான திக் திக் நிமிடங்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ரயில் விபத்தில் இரு கால்களும் துண்டான சிறுவனுக்கு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கால்களை இணைத்து நடக்க வைத்துள்ளனர்.

கேரளாவின் பய்யனூர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ரயில் விபத்து ஒன்றில் இரு கால்களும் துண்டான நிலையில் வாய்விட்டு கதறிய சாஹில் என்ற சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

சிறுவன் சாஹிலுடன் அவனது துண்டான கால்களையும் அள்ளிக்கொண்டு சென்ற அந்த பெயர் தெரியாத முகங்களுக்கு நம்பிக்கையே இருந்ததில்லை என கூறப்படுகிறது.

பின்னர் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் நீண்ட 8 மணி நேரம் கடுமையாக போராடிய மருத்துவர்கள் இரண்டரை வயதேயான சாஹிலின் துண்டான காலகளை வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.

தற்போது சிறுவன் சாஹில் எழுந்து நடக்கும் நிலையில் அவனது கால்கள் குணமாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி பய்யனூர் ரயில் நிலையத்தில் தாயாருடன் சென்ற நிலையில் விபத்தில் சிக்கி சாஹிலின் கால்கள் இரண்டும் துண்டானது.

அந்த ரயில் விபத்தில் சாஹிலின் தாயார் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டார். இதனிடையே பொலிஸ் விசாரணையில் விபத்தில் சிக்கிய தாயாரும் மகனும் தொடர்பில் தகவல் கிட்டியது.

ஆனால் பொலிசாரின் முயற்சியால் மருத்துவமனையில் சிறுவன் சாஹிலுக்கான அறுவைசிகிச்சை துவங்கியிருந்தது.

தற்போது நான்கு முக்கிய அறுவைசிகிச்சைக்கு பின்னர் சாஹில் எழுந்து நடக்கத்துவங்கியுள்ளதாக அவரது தந்தை சமீர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்