நீங்கள் எல்லாம் குழந்தையே பெத்துக்க வேண்டாம்: கொந்தளித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

Report Print Raju Raju in இந்தியா

திருமணமான கணவன், மனைவி ஒருவருக்கொருவர் துரோகம் செய்யாமல் சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளுங்கள் என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருமணமான ஆணோ, பெண்ணோ பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் தாண்டிய பாலுறவு வைத்துக்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து பேசிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த தீர்ப்பை நான் மதிக்கிறேன்.

ஆனால் சொல்வதெல்லாம் உண்மை என்ற ஷோவை பல வருடங்கள் நடத்திய அனுபவத்தில், இதனால் சமூகத்தில் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய பிரச்னைகளை என்னால் முன்கூட்டியே உணர முடிகிறது.

ஒரு திருமண வாழ்க்கையில் உனக்கு நான், எனக்கு நீ என்றுதான் நுழைகிறோம். இந்தப் பிணைப்பில் இருந்து மீறுவது என்னைப் பொறுத்தவரை துரோகம். வேறு வழியே இல்லை என்றால், சட்டப்படி விவாகரத்து வாங்கிவிடுங்கள்.

பல பெண்கள் தாங்கள் தவறிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் வலைதளங்களின் வழியாக விழுந்துகொண்டிருக்கிறார்கள்

திருமணம் தாண்டிய உறவுகள் குடும்ப அமைப்பை ஆணிவேரோடு அழித்துவிடும். தனி மனித விருப்பம் என்று அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று சென்றுவிட்டால், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் நிலைமை என்னவாகும். இதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா?

என் விருப்பப்படியெல்லாம் தான் வாழ்வேன் என்பவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாதீர்கள் அல்லது குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ளாமல் இருங்கள்.

வயிற்றில் ஒன்று, இடுப்பில் ஒன்று, கையில் ஒன்று என்று மூன்று குழந்தைகளுடன் மனைவி கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பாள். கணவனோ, வேறு ஒரு பெண்ணை தேடிப் போயிருப்பான். காரணம், அவனுக்கு மனைவி சலித்துப்போயிருப்பாள்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் சொல்லியாவது கணவரைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்றால் அதையும் இனிமேல் செய்ய முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers