தகாத உறவு குற்றமில்லை என்று தீர்ப்பு கூறிய நீதிபதியின் மனைவிக்கு பார்சல்! அது என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தகாத உறவு குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதியின் மனைவிக்கு மல்லிகைப்பூ மற்றும் அல்வா பார்சல் அனுப்ப முயன்ற இந்து மக்கள் கட்சியினரை பொலிசார் கைது செய்தனர்.

திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தகாத உறவை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497, அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இதற்கிடையே இந்து மக்கள் கட்சி தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் விழுப்புரத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பு தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் நிர்வாகிகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு மல்லிகைப்பூ மற்றும் அல்வாவை தபால் மூலம் அனுப்பிவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மல்லிகைப்பூ, அல்வாவை கூரியர் கவரில் போட்டு தபால்நிலையத்தில் பார்சல் அனுப்பிவைக்க வந்தபோது, நகர காவல்நிலைய பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers