பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது

Report Print Raju Raju in இந்தியா

நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார்.

புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை பொலிசார் கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளை பாலியல் முறைகேடுகளுக்கு உட்பட அழைத்து கைதான அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான செய்தியில் ஆளுநரை தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

அந்த புகாரின் பேரில் தான் பொலிசார் கோபாலைக் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...