வைரமுத்து விவகாரத்தில் உண்மையை கண்டறிய வேண்டும்: பிரபல நடிகர் வேண்டுகோள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

#MeToo என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.

ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

அந்த வகையில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இப்பெண்ணை தொடர்ந்து பிரபல பாடகி சின்மயி, தன்னை ஹொட்டல் அறைக்கு வைரமுத்து அழைத்தார் என புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “கவிஞர் வைரமுத்துவை பல பெண்கள் வசைபாடுகின்றனர்.

ஒருவர் குறித்து பேசுவதற்கு முன், உண்மை தன்மையை ஆராய வேண்டும். சின்மயி போன்ற பிரபலங்கள், பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் குற்றம் சாட்டுபவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது பாராட்டிற்குரியது. இதுகுறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்