வயதில் மூத்த பெண்ணை ஏமாற்றி ரகசிய திருமணம் செய்த வாலிபர்: அடுத்து செய்த அதிர்ச்சி செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வயதில் மூத்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து விட்டு பின்னர் ஏமாற்றிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூரை சேர்ந்த 30 வயது ஆசிரியை பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், நான் எம்.எஸ்சி., பி.எட். படித்து முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு கவின்குமார் (28) என்ற நபருடன் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் காதலாக மாறியது.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நானும், கவின்குமாரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.

இதையடுத்து கவின்குமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கணவன், மனைவியாக நாம் வாழலாம் என்று என்னிடம் கூறினார். அதற்கு, நாம் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்றேன்.

உடனே அவர் என் மீது நம்பிக்கை இல்லையா? என்று கூறியதுடன் கண்டிப்பாக சட்டப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறி என்னிடம் உல்லாசம் அனுபவித்தார்.

இந்நிலையில் கவின்குமாரின் செல்போன் திடீரென சுவிட்ச் ஆப் என்று வந்ததால் கடந்த ஜூலை மாதம் 19-ந் திகதி நான் அவருடைய வீட்டிற்கு சென்றேன்.

அப்போது அங்கிருந்த கவின்குமார் மற்றும் அவரின் உறவினர்கள் என்னை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

என்னை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய கவின்குமார் மற்றும் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

பெண்ணின் புகாரை பெற்று கொண்ட பொலிசார் கவின்குமார் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த கவின்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers