சென்னை விமான நிலையத்தில் பாடகி சின்மயி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
வைரமுத்து மீது தொடர் பாலியல் குற்றசாட்டுகளை கூறிவரும் சின்மயி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்கிறார்கள் அதற்காக உடல் முழுவதும் கமெராவா வைத்திருக்க முடியுமா?
விளம்பர நோக்கில் நான் எதையும் செய்யவில்லை, நான் முன்னணியில் உள்ள பாடகி. நான் சொல்வது அனைத்தும் உண்மை என்று வைரமுத்து சாருக்கு தெரியும்.
அப்போது இதுகுறித்து சொல்வதற்கு துணிச்சல் இல்லை. ஆனால் இப்போது எதற்கும் பயப்படவில்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் பல உண்மைகள் வெளியே வரும்.
வைரமுத்து மீது பொலிசில் புகார் அளிப்பது குறித்து வழக்கறிஞரிடம் ஆலோசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.