பெண்கள் மட்டும் சரியா? சின்மயியின் புகார் குறித்து கொந்தளித்த பிரபல நடிகர்

Report Print Kabilan in இந்தியா

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியதற்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் ஆவேசமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி மீ டூ ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து, நடிகர்கள் அர்ஜூன், தியாகராஜன் ஆகியோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இது தேவையில்லாத விடயம். எப்போதோ நடந்த சம்பவத்தை அப்போதே கூறியிருக்க வேண்டும்.

இப்போது அதை கூறிக்கொண்டு, அதை டிரெண்ட் ஆக்கிவிட்டு வேறு வேலையே இல்லையா என்பது போல் தோன்றுகிறது. இங்கு யார் ஒழுக்கமாக இருக்கிறார்கள்? அப்படி பார்த்தால் நான் உட்பட அனைவரையும் சிறையில் தள்ள வேண்டும்.

உத்தமர் என்று ஒருவரை காட்டுங்கள். பெண்கள் மட்டும் ஒழுக்கமா? நான் கேட்கிறேன். எல்லோருக்கும் வரைமுறை இருக்கிறது. சட்டரீதியாக, சட்டத்திற்கு புறம்பில்லாமல் நடந்துகொள்கிறோம் அவ்வளவு தான்.

எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு பெண்ணை கட்டாயப்படுத்துவது தான் தவறு. வயதான காலத்தில் அவரை தொந்தரவு செய்வது சரியில்லை.

அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. இது இயற்கையான ஒன்று. இதைப்பற்றி பேசவே அசிங்கமாக உள்ளது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையில்லாதது என்று தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers