வைரமுத்துவை சின்மயி ஏன் அறையவில்லை? பத்திரிகையாளர் நக்கீரன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ விவகாரம் குறித்து நான் பேசவிரும்பில்லை இருப்பினும் அதன் மூலம் கவிஞர் வைரமுத்து திட்டமிட்டு அசிங்கப்படுத்தப்படுகிறார் என பத்திரிகையாளர் நக்கீரன் கூறியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை சின்மயி தற்போது கூறியுள்ளார். இதனை பக்கம் பக்கமாக அனைவரும் செய்தியாக வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படி, ஒரு சம்பவம் நடந்தபோது, என்னை தவறாக அழைத்த அவரை அறைந்துவிட்டேன் என அப்பெண் கூறியிருந்தால் அது பெருமையாக இருக்கும்.

கடந்த வருடம் சுசி லீக்ஸில் சின்மயி பெயர் தவறாக அடிபட்டபோது கோபம் கொண்ட சின்மயி, சுசீத்ராவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என கூறினார்.

ஆனால், தற்போது நடப்பவற்றை பார்க்கும்போது சுசீத்ரா கூறியது அனைத்தும் உண்மைதான் என்பது போல் இருக்கிறது.

மீடூ மூலம் நன்மை என்று பார்த்தால் பெண்களுக்கு சிறிய அளவில் பாதுகாப்பு கிடைத்துள்ளது. சின்மயி விடயத்தில் கொஞ்சம் அதிகமாக அவர் பேசப்படுகிறார். எவ்வளவு பெரிய மனிதர் வைரமுத்து அவர் மீது சாதரணமாக இப்படி குற்றம்சாட்டியுள்ளார் சின்மயி.

இதற்கு வைரமுத்து கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது எனது ஆதங்கம். ஆண்டாள் விடயத்தில் வைரமுத்துவை நித்யானந்தாவின் சீடர்கள் என கூறிக்கொண்டு சில பெண்கள், மோசமாக பேசினார்கள்.

ஆனால், அந்த பெண்களுக்கு யார் தண்டனை கொடுத்தார்கள். அனைவரும் ரசித்தார்கள். இந்த விவகாரத்தில் பின்னணியில் பெரிய விடயம் இருக்கிறது. அது விரைவில் வெளியே வரும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers