காதல் கணவரை விவாகரத்து செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிசயம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பெற்றோரின் வற்புறுத்தலால் காதல் கணவரை விவாகரத்து செய்த பெண் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவரையே திருமணம் செய்யவுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் கடந்த 2011-ல் கல்லூரியில் படிக்கும் போது உடன் படித்தவருடன் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த ஆண்டே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு பெண் வீட்டார் சாதி பிரச்சனை காரணமாக ஒத்து கொள்ளவில்லை.

இதையடுத்து தங்கள் மகளை கணவரிடம் இருந்து பிரித்து யாருக்கும் தெரியாத தனி இடத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

இதோடு பெண்ணின் கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர், பின்னர் கடந்த 2013-ல் வீட்டிலிருந்து தப்பிய அப்பெண் கணவருடன் ஓடி போயுள்ளார்.

ஆனால் பெண்ணின் பெற்றோர் அவரை பிடித்து மீண்டும் வீட்டில் அடைத்ததுடன் கணவரிடம் வலுக்கட்டாயமாக விவாகரத்து பெற வைத்தனர்.

இந்நிலையில் 7 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் இறுதியில் வீட்டிலிருந்து தப்பிய நிலையில் கணவருக்கு போன் செய்தார்.

இதையடுத்து அவரின் கணவர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதன்பின்னர் அதிகாரிகள் அப்பெண்ணை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

நீதிமன்றம் தற்போது இருவரையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது, இதையடுத்து விவாகரத்து பெற்ற தம்பதி மீண்டும் திருமணம் செய்யவுள்ளனர்.

இதனிடையில் இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட பெண்ணின் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்