பிணவறையில் கணவரின் உடல்.... மருத்துவமனை முன்பு பிச்சை எடுத்த மனைவி: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை முன்பு பணத்திற்காக அவரது மனைவி பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின தம்பதியினர் டாக்ராய் மற்றும் அவரது மனைவியான முண்டா.

கடந்த சில மாதங்களுக்கு முன் தினசரி பிழைப்புக்காக தங்களது சொந்த கிராமத்தில் குழந்தைகளை விட்டு விட்டு பட்டமண்டாய் நகரத்திற்கு குடிபெயர்ந்தனர். இதனிடைய டாக்ராய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் பட்டமண்டாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி டாக்ராய் உயிரிழக்க அவரது மனையியான முண்டாய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார்.

கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய நினைத்த முண்டா அதற்கு முயற்சி செய்தார்.

அதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் இலவச அமரர் ஊர்தி சேவை பெற அணுகினார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ரூபாய் 300 கொடுத்தால் தான் அமரர் ஊர்தி சேவை வழங்க முடியும் என கூறிவிட்டது.

இதனையடுத்து 300 ரூபாய் பணத்திற்காக மருத்துவமனை முன்பு முண்டா பிச்சை எடுத்தார். முண்டா விரித்து வைத்த துண்டில், அங்கு வந்தவர்கள் தங்களால் முயன்ற பணத்தை இட்டுச் சென்றனர்.

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை கொண்டு அமரர் ஊர்தி சேவையை பெற்ற முண்டா, தனது கணவரின் உடலை அடக்கம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers