இங்கிலாந்திலிருந்து இரவில் வந்த 6 மிஸ்டு கால்: ரூ1.86 கோடியை இழந்த தொழிலதிபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையை சேர்ந்த ஷா என்ற தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ1.86 கோடி ரூபாய் திருடு போயுள்ளது,

ஷாவுக்கு 2018 டிசம்பர் 27 இரவு 11 மணி முதல் டிசம்பர் 28 காலை வரை 6 மிஸ்டு கால் அழைப்புகள் வந்துள்ளது.

அதில் ஒரு எண் இங்கிலாந்து போன் எண்.

பின்னர் காலை அந்த மொபைல் எண்ணிற்கு அழைத்தால் தன்னால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் இவரது சிம் கார்டை செயல் இழக்கச் செய்து விட்டு வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எல்லாம் திருடியுள்ளனர்.

இவரது சொந்த மொபைல் எண்ணிலியே வணிக வங்கி கணக்கும் இணைக்கப்பட்டு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சைபர் கிரைம் காவல் துறை ஐபிசி 420 (மோசடி), 419 (ஆள்மாறாட்டம்), 43 (கணினி அமைப்புச் சேதம்) போன்று 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers