நள்ளிரவில் பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்த பொலிஸ்காரர்: அடுத்து நடந்த சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்கள் இருந்த வீட்டிற்குள் நுழைந்த பொலிஸாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநகரை சேர்ந்தவர் நட்ராஜ் (55). இவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நேற்று வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அதிகாலை 6 மணிக்கு பாலாஜி என்ற பொலிஸார் சீருடையுடன் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இதனை பார்த்த அவருடைய இரண்டு மகள்களும் சத்தமிட்டு அலற ஆரம்பித்துள்ளனர்.

சத்தம் கேட்டு நட்ராஜ் எழுந்ததும், அந்த பொலிஸார் வேகமாக அங்கிருந்து தப்பி சோமங்களம் சாலையில் உள்ள ஒரு வாகன செக்போஸ்ட் பகுதியில் ஒளிந்துகொண்டார்.

இதற்கிடையில் அங்கு வந்த பொதுமக்கள் சோதனைசாவடியை முற்றுகையிட்டு பொலிசாரை வெளியே வரவழைத்துள்ளனர்.

அவரிடம் பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து கேட்கும்பொழுது, நான் பொலிஸ்காரன் எப்போது வேண்டுமானாலும், யார் வீட்டிலும் நுழைவேன் நீங்கள் என்னை கேட்க முடியாது என திமிராக பேசியுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாலாஜியை சரமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாலாஜியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்