தவறான பழக்கம்... மகனுக்கு தெரிந்த ரகசியம்: அசால்ட்டாக ஸ்கெட்ச் போட்டு கணவனை தூக்கிய மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கொல்கத்தாவில் மனைவி ஒருவர் தனது தவறாக பழக்கம் கணவருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது மகன் உட்பட 5 பேரின் உதவியுடன் கணவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ரமுனா என்பவர் பல்வேறு திருட்டு குற்றங்கள் செய்த காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் சிறையில் இருந்த நேரத்தில் இவரது மனைவிய யமுனாவுக்கு, யாதவ் என்பவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டது.

மகன் சமீர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளான். இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த சமீருக்கு தனது தாயின் ரகசியம் தெரிந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து தனது மகனின் காலில் விழுந்து அவனை சமாதானம் செய்துள்ளார்.

தயவு செய்து இதனை வெளியில் சொல்லிவிடாதே, உனது தந்தை நல்லவர் கிடையாது என தனது மகனை சமாதானம் செய்துள்ளார். இதற்கிடையில் கணவர் ரமுனா சிறையில் இருந்து வந்துள்ளார்.

தனது ரகசியம் கணவருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும், தனது இரண்டாவது திருமணத்திற்கு கணவர் இடையூறாக இருக்கிறார் என மகனிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காதலன், மகன் மற்றும் மகனின் 3 நண்பர்கள் ஆகியோரின் உதவியுடன் கணவரை கொலை செய்துள்ளார்.

மதியம் 1 மணியளவில் வீட்டில் தூங்கிகொண்டிருந்த கணவனை துப்பாக்கியால் இரண்டு முறை நெற்றில் சுட்டு கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers