சவப்பெட்டியை திறந்து பார்க்காதீங்க..தீவிரவாதியால் கொல்லப்பட்ட இராணுவவீரரின் குடும்பத்தினர் கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்த அமர் வசந்த குமாரின் சவப்பெட்டியை திறக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியதால், அவர்கள் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலினால் 45 துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்த நிலையில், அவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அந்த வகையில் கேரளாவின் லக்கிடி மாவட்டத்தைச் சேர்ந்த அமர்வசந்த குமார் என்பவரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அவரின் உடலை கொண்டு வருவதை அப்பகுதி மக்கள் அறிந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்..

அப்போது அங்கிருந்தவர்கள் பலரும் வசந்தகுமார்க்கு ஜெய், பாரத் மாதக்கி ஜெய் என்று முழுக்கமிட்டனர். அங்கு அவரின் மனைவி ஷீனா, தாய் சாந்தா மற்றும் உறவினர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதுமட்டுமின்றி வசந்தகுமாரின் தாய் சாந்தாவிற்கு காலில் ஏதோ பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று விடுமுறைக்கு வந்த போது கூறியுள்ளார்.

ஆனால் சாதாவோ அடுத்த முறை வரும் போது போய்க்கொள்ளலாம் என்று கூறி சென்றவர். இப்போது இந்த நிலையில் என்று கண்ணீர்விட்டு அழுந்துள்ளார்.

மேலும் ஒரு விஷயத்தை அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தினரிடம் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். ஏனெனில் குண்டுவெடிப்பு தாக்குதலால் இறந்துள்ளதால், அவரின் சவப்பெட்டியை திறந்து பார்க்க வேண்டாம் என்று அதிகார்கள் கூறிதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்