பணக்காரனோ அல்லது ஏழையோ, இந்த ஊரில் இப்படி தான் திருமணம் நடக்கும்... ஆச்சரியப்படுத்தும் தமிழர்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உள்ள ஒரு ஊரில், இந்த நவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயர் எழுவனம்பட்டி.

இங்கு ஒரு சமூக மக்கள் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த ஊரை சேர்ந்தவர் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அல்லது ஏழையாக இருந்தாலும் ஊர் மந்தையில் தான் பாரம்பரிய சடங்குகளின்படி திருமணம் நடக்கிறது.

நேற்று இங்கு ராமகிருஷ்ணன் - பவித்ரா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்துக்கு பாலை மரத்தின் குச்சிகள் மற்றும் கிளைகளை வெட்டி எடுத்து வரப்பட்டது.

அந்த குச்சிகளை வைத்து மணப்பெண்ணுக்கு குடிசை கட்டப்பட்ட பின்னர் அவர் அங்கு அமரவைக்கப்பட்டார்.

இதையடுத்து அருகில் விரிக்கப்பட்ட சாக்கில் மணமகன் ராமகிருஷ்ணன் அமர்ந்தார்.

அதை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டதோடு, மணமகன் பஞ்சகல்யாணி குதிரையில் ஊர் மந்தையை சுற்றி வந்தார்.

இறுதியில், குதிரையிலிருந்து கீழே இறங்க விடாமல் தாய்மாமன் மணமகனைத் தூக்கிக்கொண்டுபோய் மணமகளிடம் ஒப்படைத்தார்.

இதைதொடர்ந்து பாரம்பரிய வாழ்த்துப் பாடல்கள் ஒலிக்க ராமகிருஷ்ணன் பவித்ரா கழுத்தில் தாலி கட்டினார்.

இதன்பின்னர் இரு குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடி அசத்தினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers