157 பேருடன் நொறுங்கிய விமானம்..... அக்காவின் குழந்தையை பார்க்க சென்ற இடத்தில் பலியான இந்திய பெண்ணின் உடலை கண்டுபிடிப்பதில் சிரமம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்திய பெண்மணி மனிஷா தனது அக்காவுக்கு பிறந்த குழந்தைய பார்க்க சென்றபோது எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனிஷா அமெரிக்காவில் எம்எஸ் படித்து வருவதால் 2014 ஆம் ஆண்டில் இருந்து அங்குதான் வசித்து வருகிறார்.

மனிஷாவின் சகோதரி நைரோபியாவில் வசித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில்தான் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. இதனால் அவரை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்து எத்தியோப்பியா வந்து, அங்கிருந்து எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் மூலம் நைரோபியா சென்றுள்ளார்.

இந்த பயணத்தின்போது தான் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்துபோன மனிஷாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இறந்துபோனவர்களின் உடலை கண்டுபிடிப்பதில் கடினம் இருக்கிறது என எத்தியோப்பியா தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers