நடிகர் பிரகாஷ்ராஜ் வேட்புமனு தாக்கல் – தேசிய கட்சிகள் மீது கடும் தாக்கு

Report Print Abisha in இந்தியா

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஒரு ஆண்டாக அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். சமூக வலைதளங்கள் மூலமாக பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து, தனது டிவிட்டரில் ”தொகுதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்’ என பதிவிட்டார்.

அதன் பின்னர் வரும் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடுவதாக அவர் டுவிட்டரிலேயே தெரிவித்திருந்தார்.

கடந்த மாதமே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரகாஷ் ராஜ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது, ஆளும் பாஜக எம்.பியான பி.சி.மோகனை எதிர்த்து பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.

வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘தேசியக் கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வி அடைந்துவிட்டன. நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்