தீக்குளித்து இறந்த பெண்ணுக்கு திடீரென உயிர் வந்ததால் பரபரப்பு!

Report Print Vijay Amburore in இந்தியா

திருச்சியில் தனியார் மருத்துவமனையால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், அரசு மருத்துவமனையில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பற்ற சென்ற போது அவருடைய கணவர் முருகேசனும் தீக்காயமடைந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட சுமதி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

திடீரென அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதை அடுத்து, வேகமாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் சுமதி உயிருடன் இருப்பதை உறுதி செய்து, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுசம்மந்தமாக சுமதியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers