மயங்கி விழுந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்: அவர் தற்போது எப்படியிருக்கிறார்?

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்த நடிகர் மன்சூர் அலிகான் உடல்நிலை தேறி மீண்டு சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

இதையடுத்து மக்களைக் கவரும் வகையில் விதவிதமாக அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட போது மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள மன்சூர் அலிகான் மீண்டும் தனது பிரசாரத்தை இன்று தொடர்ந்து வருகிறார்.

பிரசாரத்துக்கு இடையே மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை அவர் சாப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்