ஐந்தாண்டுகளில் எனது சொத்துப் பட்டியலில் ஒரு பைசாகூட அதிகரிக்காது: உறுதியளித்த வேட்பாளர்

Report Print Arbin Arbin in இந்தியா

மீண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பமைந்தால் தன்னுடைய சொத்து மதிப்பில் முறைகேடாக ஒரு நயா பைசாகூட அதிகமாக இருக்காது என கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், எளிமையான விவசாய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளேன்.

எனக்கு வாக்களித்து, நீங்கள் என்னை வெற்றிபெறவைத்தால், நேர்மையாகவும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காகப் பணியாற்றுவேன்.

உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். எனவே, நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழி அளிக்கிறேன்.

அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை போல கடந்த 10 ஆண்டுகளில், 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சம்பாதித்துக்கொள்ள மாட்டேன்.

என்னுடைய தேர்தல் அறிக்கையில், என்னுடைய பாரம்பர்ய விவசாய சொத்துக்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இதேபோல, அடுத்த ஐந்தாண்டுகளில்,

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, மீண்டும் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கினால்,

என்னுடைய சொத்து மதிப்பில் முறைகேடாக ஒரு நயா பைசாகூட அதிகமாக இருக்காது. அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரையைப்போல, பண பலத்தை நம்பி இந்தத் தேர்தலில் நிற்கவில்லை.

மக்களாகிய உங்கள் பலத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers