தமிழகத்தில் சிசிடிவி கமெராக்களை செயலிழக்க செய்து வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டம்.... பரபரப்பு புகார்

Report Print Raju Raju in இந்தியா

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக பரபரப்பு புகார் கொடுத்துள்ளது.

அதில், 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் காவல்துறை பாதுகாப்பை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்