இலங்கை குண்டு வெடிப்பு பற்றி இந்தியாவுக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தது எப்படி? சொன்னது யார்? வெளியான முழுத் தகவல்

Report Print Santhan in இந்தியா

இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது பற்றி இந்தியாவுக்கு எப்படி முன்கூட்டியே தெரியும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் திருநாளன்று இலங்கையின் தேவாலயம் மற்றும் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தான் இப்போது உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்ற போதிலும், முன்பே இந்தியா இது போன்ற தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர்களின் அஜாக்கிரதையா இது போன்ற மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவது இந்தியாவுக்கு எப்படி தெரியும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்தியாவில் அண்மையில் ஐஎஸ் தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்தான் இலங்கை குண்டுவெடிப்பு குறித்த திட்டத்தை தெரிவித்திருந்தான் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

இருப்பினும் அந்த நபரை கைது செய்தது எப்போது என்பது குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இலங்கையில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜஹ்ரானின் பெயர் மற்றும் விவரங்களை கடந்த 4-ஆம் திகதி இந்தியா இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 11-ஆம் இந்த விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றில், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமும் அவரது இயக்கத்தினரும் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப் போவதாக ஒரு வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு ரகசிய தகவல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை இரு ஆண்டுகளாக இலங்கை பொலிசாருக்கு தெரியும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இலங்கையில் உள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியவர்கள். நாட்டில் 100 முதல் 150 பேர் வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்