சாலையில் அமர்ந்து வழிபாடு நடத்தியவர்களை எதிர்த்த மற்றொரு பிரிவினர்.... கலவர பூமியான அசாம்

Report Print Abisha in இந்தியா

அசாம் மாநிலத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் அந்த பகுதி கலவர பூமி போல் காட்சி அளிக்கின்றது.

இந்தியாவின், அசாம் மாநிலத்தில் ஹைலகண்டி நகரில் காளி பாரி என்னும் இடத்தில், ஒருபிரிவினர் சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வன்முறை பெருமளவில் வெடித்ததால், ராணவத்தின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 15பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அந்த பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்துவிசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்