மாமனாரின் கோர முகம் குறித்து கணவரிடம் கூறிய இளம்பெண்: அதை நம்பாமல் விவாகரத்து கோரிய கணவன்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாமனார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் பொலிசில் புகார் கொடுத்தும் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈரோடு சென்னிமலையில் உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் அருண். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆனது முதலேயே அருண் தந்தை பழனிச்சாமி மருமகள் மீது பாலியல் ரீதியாக அத்து மீறியுள்ளார்.

இது குறித்து இளம்பெண் அருணிடம் கூறிய போது அதை நம்ப மறுத்த அவர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாற்றுத்திறனாளியான தனது தந்தையுடன் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாமனார் மீது புகார் அளித்துள்ளார்.

ஆனால் காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேச முயன்றதால், ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்