இந்தியாவில் கடந்த ஏபர்ல் 11ம் திகதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று மே 19 மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
543 மக்களவை தொகுதிகள் கொண்ட இந்தியாவில்,நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. ஏப்ரல் 11ம் திகதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் மே 19 இன்று 7ம் மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
7ம் கட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 6 மணி நிலவரப்படி, உத்தரப்பிரதேசம் 54.37 சதவீதம், ஹிமாச்சலப்பிரதேசம் 66.18 சதவீதம், ஜார்க்கண்ட் 70.5 சதவீதம், சண்டிகர் 63.57 சதவீதம், பஞ்சாப் 58.81 சதவீதம், பீகார் 49.92 சதவீதம், மத்திய பிரதேசம் 69.38 சதவீதம், மேற்கு வங்கம் 73.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
543 தொகுதிகளில் தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதியை தவிர 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்ல் வாக்குப்பதிவு 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவடைந்தது.
7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.