தேர்தல் முடிவுகள் 2019! ஆட்சி அமைக்கப்போவது யார்? பாஜக முன்னிலையில்

Report Print Santhan in இந்தியா
2103Shares

இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11- ஆம் திகதி துவங்கி கடந்த 19- ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

 • May 23, 2019
 • 03:19 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

இது மக்களாட்சியின் மிகப்பெரிய நிகழ்வு, தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றியும் பாராட்டும்- மோடி

 • May 23, 2019
 • 03:17 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றும் கூட்டம் நடந்து வருகிறது.

 • May 23, 2019
 • 01:43 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4 லட்சத்து 47 ஆயிரத்து 150 வாக்குகள் பெற்று 3 லட்சத்து 437 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சி பாமக வேட்பாளர் ஷியாம் பால் 1லட்சத்து 46 ஆயிரத்து 713 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

 • May 23, 2019
 • 01:15 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழகத்தில் பாஜக-வின் தோல்வி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌதர்ராஜனின் டுவிட் ”உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும் உயர்ரத்த அழுத்தம் சிறுநீரக பாதிப்பு இதயநோய் வரும் உங்கள் குடும்படாக்டரை கேட்டால் உண்மை புரியும் ?இழப்பு. யாருக்கு ? காலம் பதில் சொல்லும்?”

 • May 23, 2019
 • 01:09 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

டுவிட்டரில் சௌக்கிதார் என்ற தனது அடைமொழியை நீக்கினார் மோடி

 • May 23, 2019
 • 12:52 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

பாஜக-வினருக்கு வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் வரும் 26ஆம் திகதி புதிய அரசு பதவி ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • May 23, 2019
 • 12:48 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

ராகுல் காந்தி பதவி விலக போவதாக தகவல்... தோல்வியை பொறுப்பேற்று பதவி விலகி கொள்ள விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • May 23, 2019
 • 12:45 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

 • May 23, 2019
 • 12:42 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்- திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 • May 23, 2019
 • 12:22 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்கள் தான் மன்னர்கள் அவர்கள் அளித்துள்ள தீர்ப்பை நான் மதிக்கிறேன் - ராகுல் காந்தி

 • May 23, 2019
 • 12:21 PM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் தென்னாசியாவில் அமைதியை அவருடன் ஏற்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 • May 23, 2019
 • 11:20 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தல் தமிழகம் !

 • 20 இடங்களில் அமமுக 3ம் இடம்
 • 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம்
 • 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் 3ம் இடம்

 • May 23, 2019
 • 11:13 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோதி சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி யாதவைவிட 4.53 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

 • May 23, 2019
 • 11:08 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஜப்பான் பிரதமர் Shinzo Abe தொலைபேசி வழியாக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 • May 23, 2019
 • 11:06 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

வயநாட்டில் ராகுல் காந்தியின் வெற்றியை கொண்டாடும் ஆதரவாளர்கள்

 • May 23, 2019
 • 11:02 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாஜக 59 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணிக் கட்சிகள் இரு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

 • May 23, 2019
 • 10:41 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஆந்திராவில் வென்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஷாவில் வென்ற நவீன் பட்நாயக்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • May 23, 2019
 • 10:32 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

பாஜக-வின் தொடர் முன்னிலையை மும்பையில் கொண்டாடும் பாஜக தொண்டர்கள்

 • May 23, 2019
 • 10:14 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், கோயமுத்தூரில் இருக்கும் பாஜக கூட்டணி தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் மீண்டும் மோடி என்று மலர்களால் கோலமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

 • May 23, 2019
 • 09:42 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

 • May 23, 2019
 • 09:34 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

உத்திரப்பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை விட, பாஜக வேட்பாளர் ஸ்மிர்தி இராணி தற்போது முன்னிலையில் உள்ளார்.

 • May 23, 2019
 • 09:02 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரபாபுநாயுடு தனது பதவியை ராஜினிமா செய்யவுள்ளார்.

இதைத் தொடர்ந்து வரும் 30-ஆம் திகதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்கிறார் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் உமாரெட்டி வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார்.

 • May 23, 2019
 • 08:51 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் பாஜகவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், மோடிஜி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், சாதித்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 • May 23, 2019
 • 08:50 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தலில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் பாஜகவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 • May 23, 2019
 • 08:43 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தலின் தற்போதைய நிலவரம்

கூட்டணிகள்போட்டி முன்னிலை வெற்றி
பாஜக+ 538 343 0
காங்கிரஸ்+ 500 91 0
மெகா+ 252 85 0
மற்றவை 340 23 0

 • May 23, 2019
 • 08:12 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

 • May 23, 2019
 • 07:43 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

நரேந்திர மோடியின் மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளோம்- ரணில் விக்ரமசிங்கே

 • May 23, 2019
 • 07:12 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை.

மொத்த வாக்குகள்: 2,58,758

காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் - 1,48,963

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி - 78,311

 • May 23, 2019
 • 07:11 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தருமபுரி மக்களவை தொகுதியில் 268 வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் பின்னடைவு

 • May 23, 2019
 • 07:10 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக போட்டியிட்ட மத்திய பெங்களூரு தொகுதியில் இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் 3%க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் முன்னிலை வகிக்கிறார்.

 • May 23, 2019
 • 06:36 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜகவின் பல இடங்களில் முன்னிலையில் உள்ளதால், பாஜக தொண்டர்கள் பெங்களூருவில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய புகைப்படங்கள்.

 • May 23, 2019
 • 06:19 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக 12 இடங்களில் முன்னிலை பெற்று வருவதால், அக்கட்சியினர் சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 • May 23, 2019
 • 06:15 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருக்கும் நிலையில், சென்னையில் இருக்கும் பாஜக அலுவலகத்தின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

 • May 23, 2019
 • 06:08 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன், முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சரவணனைக் காட்டிலும் 8443 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

 • May 23, 2019
 • 05:50 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை

கூட்டணிகள் போட்டி முன்னிலை வெற்றி
பாஜக+ 538 352 0
காங்கிரஸ்+ 500 104 0
மற்றவை 340 86 0

 • May 23, 2019
 • 05:40 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழகத்தில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் 16,936 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார். மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான பொன். இராதாகிருஷ்ணன் பின்னைடைவு.

 • May 23, 2019
 • 05:39 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

 • May 23, 2019
 • 05:33 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பா.ஜ.க பின்னடைவை சந்தித்துள்ளது.

 • May 23, 2019
 • 05:27 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

உத்தரப்பிரதேசத்தில் நாடு முழுவதும் எதிர்பார்த்த மாயாவதி- அகிலேஷ் கூட்டணி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பாஜக அதிக இடங்களில் முன்னிலை.

 • May 23, 2019
 • 05:19 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது. கொண்டாட்டத்தில் கட்சியினர்.

 • May 23, 2019
 • 05:17 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

ஒரிசா சட்டமன்ற தேர்தலில் நவீன்பட்நாயக் அமோக வெற்றி- மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பிஜுஜனதா தளம்.

 • May 23, 2019
 • 05:11 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதி்ல் ஐந்து மணிநேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 • May 23, 2019
 • 05:06 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

குஜராத் காந்திநகரில் பாஜக வேட்பாளர் அமித் ஷா 1,52,186 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜே.சாவ்டா 52,594 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

 • May 23, 2019
 • 04:44 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

டெல்லி, ராஜஸ்தான், அருணாச்சல் பிரதேஷ், குஜராத், இமாச்சலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு

 • May 23, 2019
 • 04:24 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தேர்தல் ஆணையத்தின் தகவலின் படி பாரதிய ஜனதா கட்சி 144 தொகுதிகளிலும், காங்கிரஸ் 49 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 42 தொகுதிகளிலும் முன்னிலை.

 • May 23, 2019
 • 04:24 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 38,513 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

 • May 23, 2019
 • 04:11 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மேற்குவங்கத்தில் மொத்தம் போட்டியிட்ட 42 தொகுதிகளிலில், திரிணாமூல் காங்கிரஸ் 14 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

 • May 23, 2019
 • 04:04 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

கர்நாடகாவில் உள்ள மொத்தம் போட்டியிட்ட 28 தொகுதிகளில் பாஜக 22 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் மற்றவை 1 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.

 • May 23, 2019
 • 04:03 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தேர்தல் முடிவுகள் வர தொடங்கியதை அடுத்து பங்கு சந்தையில் முன்னேற்றம் காணப்படுகிறது.

 • May 23, 2019
 • 03:47 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தற்போதைய நிலவரப்படி.

கூட்டணிகள் போட்டி முன்னிலை வெற்றி
பாஜக+ 538 296 0
காங்கிரஸ்+ 500 102 0
மற்றவை 340 93 0

 • May 23, 2019
 • 03:14 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில், நம் கையில் மாநில அரசு, நாம் காட்டுவதே மத்திய அரசு என பூக்களால் வசனம் எழுதப்பட்டுள்ளது.

 • May 23, 2019
 • 03:06 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தற்போதைய நிலவரப்படி,

கூட்டணிகள் போட்டி முன்னிலை வெற்றி
பாஜக+ 538 115 0
காங்கிரஸ்+ 500 30 0
மற்றவை+ 340 2 0
மெகா+ 252 0 0

 • May 23, 2019
 • 03:05 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 8 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

 • May 23, 2019
 • 03:00 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவை தேர்தலின் முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 8.15 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 54 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

 • May 23, 2019
 • 02:47 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

 • May 23, 2019
 • 02:47 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

 • May 23, 2019
 • 02:42 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

 • May 23, 2019
 • 02:31 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

தோல்வி பயத்தில் தான் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மீது எதிர்கட்சிகளுக்கு சந்தேகம்- அமித் ஷா

 • May 23, 2019
 • 02:25 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

ராகுல் காந்தியின் வீட்டிற்கு வெளியே குவிந்துள்ள ஆதரவாளர்கள்

 • May 23, 2019
 • 02:25 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், ராகுல் காந்தியே அடுத்த பிரதமர்- காங்கிரஸ் வேட்பாளர் Ajay Maken

 • May 23, 2019
 • 02:04 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து மொத்தம் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

 • May 23, 2019
 • 01:56 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், சாமி தரிசனம் செய்யும் வேட்பாளர்கள் .

 • May 23, 2019
 • 01:29 AM
தேர்தல் முடிவுகள் 2019: ஆட்சி அமைக்கப்போவது யார்?

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.

Load More

கடந்த 19-ஆம் திகதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது, அந்த அறையில் அதிகபட்சமாக 14 மேசைகள் வரை அமைக்கப்பட்டிருக்கும், தேவைப்படின் அதிக மேசைகள் அமைக்கப்படலாம்.

மேலும் அந்த அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் இருக்கலாம்.

முதலில் வாக்கு இயந்திரம் சரிபார்க்கப்பட்ட பின்னர், கண்ட்ரோல் யூனிட்டில் ரிசல்ட் என்ற பட்டனை அழுத்தினால் எந்த வேட்பாளர் எத்தனை வாக்குகளை பெற்றுள்ளார் என்பது தெரியவரும்.

14 மேசைகளிலும் இருக்கும் இயந்திரத்தில் ஒரேநேரத்தில் எண்ணப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும், இதன் மூலமே முன்னிலை விபரங்கள் தெரிவிக்கப்படும்.

அத்துடன் ஒரு தொகுதியில் எத்தனை வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டனவோ அதைப் பொறுத்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் சுற்றுகள் மாறும்.

அத்தனை சுற்றுகளும் முடிந்த பிறகு, யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் தேர்தல் அலுவலர் முடிவுகளை அறிவிப்பார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்