இரவில் காணாமல் போன காதல் ஜோடி: ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரத்தில், இளம்ஜோடி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளனர்

இந்த தகவல் அறிந்ததும் உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட இருவரும் உள்ளூரை சேர்ந்த 15 வயதான ரபேனா மற்றும் 19 வயதான ராம் பால் என்பது அடையாளம் காணப்பட்டது.

இவர்கள் இருவரும் 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சனிக்கிழமையன்று இரவு 8 மணிக்கு திடீரென மாயமாகியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers