ஆபாச புகைப்படங்களை அனுப்பி பல ஆண்களை வீழ்த்திய இளம் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் செய்வதாக கூறி ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண்ணைப் பற்றி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு திருமணத்திற்காக தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன்னை பற்றிய விவரங்களை பதிவிட்டுள்ளார்.

அப்போது சேலத்தைச் சேர்ந்த மேகலா என்ற பெண் இவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

வருங்கால மனைவி தானே என்று பாலமுருகனும் அவருக்கு லட்சக்கணக்கில் அவர் செலவு செய்துள்ளார். அதன் பின்பு மேகலாவைப் பற்றி விசாரித்த போது, அவர் பல ஆண்களிடம் பழகி வருவது இவருக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் மேகலாவைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புகார் கொடுத்த பாலமுருகன், மேகலாவின் போனைப் பார்த்த போது, அதில் அவர், பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வாட்ஸ்அப், எஸ்எம்எஸ். சில் கொஞ்சி பேசும் உரையாடல்கள் மற்றும் தன்னுடைய உடலை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்திருப்பது போன்றவற்றை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இப்படி ஏமாற்றிவிட்டாயே என்று கேட்ட போது, அவர், நான் விலைமாது தான், இது எனக்கு வாடிக்கையானது. நீ ஏமாந்தால் நான் என்ன செய்ய முடியும். என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சேலத்தில் பெரிய ஆட்கள் எல்லாம் தெரியும். உன்னை மட்டுமல்ல, உன் குடும்பத்தையே ஒழித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அவர் சேலத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் நகை மற்றும் பணங்களை திரும்பப் பெறலாம் என்று போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அங்கு சென்ற போது, அங்கிருந்தவர்கள் மேகலாவுடன் சேர்ந்து கொண்டு, பாலமுருகனை கட்டாய தாலி கட்ட வைத்துள்ளனர்.

அதை சாட்சிக்காக படமாக எடுத்து வைத்துள்ளனர். இது குறித்து பாலமுருகன் ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளவே இல்லை எனவும், மேகலாவால் பாதிக்கப்பட்ட இன்னும் சிலர் புகார் கொடுத்த பின்னரே இது தீவிரவமாக விசாரிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்களை ஏமாற்றிய இளம்பெண் மேகலா, தனது படங்களை வாட்ஸ்அப்பில் பலருக்கும் அனுப்பியுள்ளார்.

மேலும் தன் வலையில் விழுந்த நபர்களுடன் செல்பியும் அதிகளவு எடுத்திருக்கிறார். இந்த படங்கள் எல்லாம், தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகியுள்ளது.

கோவை, கடலூர், மதுரை, சென்னை, திருச்சியை சேர்ந்த பலரை தனது காமவலையில் வீழ்த்தியுள்ளார்.

அந்த நபர்களின் படமும் பரவி வருகின்றன. குறிப்பாக தன்னுடன் பழகிய நபர்களுடன் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட ஆபாச படங்கள், மெசேஜ்கள் வைரலாகி வருகிறது.

மேலும் இதில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த மாதம் மேகலா, பாலமுருகன் மீது காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், எனது கணவர் பாலமுருகன், எனது ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி, வேறு சிலருடன் என்னை இணைத்து பேசி கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம், ஆபாச படங்களை பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலமுருகன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், இதனால் இது குறித்து முழு விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers