தமிழகத்தில் இஸ்லாமியர்கள் போன்று உடை அணிந்து சுற்றித்திரியும் மர்மநபர்கள்: அவர்களிடம் பிடிப்பட்டது என்ன...?

Report Print Abisha in இந்தியா

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இஸ்லாமியர்கள் போன்று உடையணிந்து நின்றிருந்த இரு வடமாநில பெண்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில், 10க்கும் மேற்பட்ட வெளிமாநில ஆண்கள் மற்றும் பெண்கள் இஸ்லாமியர்கள் போல் பர்தா அணிந்து கொண்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

அதில், சந்தேகமடைந்த பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலின் பேரில் பொலிசார் வரவே அங்கிருந்த இருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடினர்.

அதில், பொலிசாரிடம் இரு பெண்கள் மட்டும் சிக்கிய நிலையில், அவர்களின் உடைமையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரும் மகாரஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ள நிலையில், கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் மற்றவர்களையும் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்