ஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள்! அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்துக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் மனைவி பிரேமலதா அது குறித்து விளக்கமளித்துள்ளார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் வீடு, கல்லூரி மற்றும் நிலம் ஆகியவற்றை ஏலத்துக்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய் கடன் தொகைக்காக இந்த ஏலம் நடத்தப்படுவதாக வங்கி தெரிவித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், எங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது. சட்டப்பூர்வமாக இந்த பிரச்சனையை சந்தித்து மீண்டு வருவோம்.

விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் போதிய அளவு வருவாய் இல்லை.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்