வீட்டு மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்த திருமணமான இளம்பெண்.. நள்ளிரவில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

உத்தரபிரதேசத்தில் திருமணமானதை மறைத்த இளம்பெண்ணை அவர் குடும்பத்தார் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் நிஷா. இவர் சுனில் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனக்கு திருமணமான விடயத்தை சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தாரிடம் நிஷா கூறினார்.

ஆனால் நிஷாவும், சுனிலும் தூரத்து உறவினர்கள் என்பதால் நிஷா குடும்பத்தார் இந்த திருமணத்தை ஏற்க முடியாது என கூறிவிட்டனர்.

இந்நிலையில் நேற்றிரவு நிஷா தனது வீட்டு மொட்டை மாடியில் சென்று தனியாக படுத்தார்.

அப்போது நள்ளிரவில் அங்கு வந்த குடும்பத்தாருக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் திடீரென அவரை யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் உயிருக்கு போராடிய நிஷாவை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கினார்.

நிஷா கணவர் சுனில் கூறுகையில், நிஷா தந்தை என்னிடம், நான் சொந்த வீடு கட்டினால் நிஷாவுடன் வாழ அனுமதிப்பதாக கூறினார்.

ஆனால் நான் அதை செய்தும் அவர் குடும்பத்தார் எங்களை வாழ அனுமதிக்கவில்லை.

நிஷாவின் பெற்றோர், சகோதரர்கள் தான் அவளை கொன்றுவிட்டதாக கூறினார்.

பொலிசார் கூறுகையில், நிஷாவுக்கு சுனில் தூரத்து உறவினர் ஆவார், இதனால் தான் நிஷா குடும்பத்தார் அவர் திருமணத்தை ஏற்கவில்லை.

சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்