முகிலனுக்கு இருதய நோய் தொடர்பான பிரச்சினை.. டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுப்பு!

Report Print Kabilan in இந்தியா

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முகிலனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

சமூக போராளி முகிலனுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அப்போது அவருக்கு நெஞ்சு வலி அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, முகிலனுக்கு இருதய நோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பதால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அவரது உடல்நல பரிசோதனை முடிவுகள் நாளை தான் கிடைக்கும் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது முகிலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, இன்று பொலிசாரால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முழு தகவலுக்கு வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்