மனைவியை பழிவாங்க நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கணவன்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மனைவியை பழிவாங்குவதற்காக கணவன் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் Ranga Reddy மாவட்டத்தில் இருக்கும் Kalwakole பகுதியைச் சேர்ந்த 27 வயது நபருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது.

இவர் Turkayamjal-வில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் லேப் ஆய்வாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரை சமீபத்தில் பொலிசார் கைது செய்தனர். கைதுக்கான காரணம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய மனைவியின் பெயரில் பேஸ்புக் Account Open செய்துள்ளார்.

அதன் பின் அதிலே கணவன் மூழ்கியதால், சந்தேகமடைந்த மனைவி அவரின் பேஸ்புக்கை பார்த்த போது, அதில் தன் பெயரில் வேறொரு பெண்ணுடன் பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்து கணவனை பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் மிகுந்த வேதனையில் இருந்த கணவன், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு, சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். இருப்பினும் தன்னை தவிக்க விட்டு சென்ற மனைவியை பழிவாங்குவதற்காக அவர் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதையடுத்து அவர் மனைவி இது குறித்து புகார் கொடுக்கப்பட்டதால், பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers