வெளிநாட்டில் தந்தை! சித்தியுடன் தவறான உறவு.. சிறுவன் கொலை வழக்கில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் முறை தவறிய உறவால் பள்ளி மாணவனை ஒரு குடும்பமே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் - பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவக்குமார்.

இவர் கடந்த 26 ம் திகதி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

கேசவன் வெளி நாட்டில் தங்கி வேலைபார்த்துவரும் நிலையில், இங்கு தனது தாய் பராசக்தி, அண்ணன் சரத்குமார் மற்றும் அக்காவுடன் வசித்து வந்த நிலையிலேயே சிவக்குமார் கொல்லப்பட்டான்.

சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார், அந்த இடத்தில் ஆணுறைகள் சிதறி கிடந்ததையும் கண்டுபிடித்தனர். பின்னர் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணையை முன்னெடுத்தனர்.

அப்போது சிவக்குமார் வீட்டருகில் சென்று நாய் படுத்து கொண்டது.

சிறுவன் வீட்டில் இருந்து சென்றுள்ளான் என்பதால் நாய் அங்கு சென்று படுத்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த கொலை வழக்கில் சிறுவனின் குடும்பமே பொலிசில் சிக்கியுள்ளது.

சிவக்குமாரின் தந்தை வெளிநாட்டிற்கு சென்று விட்டதால், தாய் பராசக்தியின் நடத்தை சரியில்லை என்று கூறப்படுகிறது.

இதனை சிலமுறை நேரில் பார்த்த மூத்த மகன் சரத்குமாருக்கு, அவனது சித்தியுடன் முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இவர்களின் பழக்கத்தை பார்த்து விட்டதால் உடன் பிறந்த தங்கையையும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான் சரத்குமார்.

வெளியில் சொன்னால் தீர்த்துக் கட்டிவிடுவேன் என்ற சரத்குமாரின் மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணும் எதையும் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். அண்மையில் ஒரு நாள் சரத்குமார் தனது தங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை சிவக்குமார் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை எங்கே அவன் ஊராரிடம் சொல்லி விடுவானோ என்று அஞ்சி அவனை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்துள்ளான் சரத்குமார்.

சம்பவத்தன்று தனது சித்தி மற்றும் தங்கையிடம் இது குறித்துச் சரத்குமார் கூறிய நிலையில் அவர்கள் சிவக்குமாரை உடும்பு பிடிக்கலாம் என்று ஏமாற்றி, கொலை செய்யும் நோக்கில் காப்புக்காட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சரத்குமார் அரிவாளால் சிவகுமாரின் தலையை பிடித்து அறுத்துள்ளான். அப்போது உஷாராகி தப்பித்து ஓட முயன்ற சிவக்குமாரை அவனது சித்தியும், சகோதரியும் சேர்ந்து கால்களை பிடித்துக் கொள்ள காமம் கண்ணை மறைக்க தனது உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் அவனது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான் சரத்குமார்.

இரு பெண்களையும் தனது முறை தவறிய உறவுக்கு பயன்படுத்தியதோடு, கொலை சம்பவத்திலும் சரத்குமார் சாமர்த்தியமாக பேசி ஈடுபட வைத்து உள்ளது அந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில் இறுதியாக உண்மை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்