அவனை விசாரிச்சோம், செத்துட்டான்... தற்பெருமையால் 30 வருடங்களுக்குப் பிறகு சிக்கிய பொலிஸ் அதிகாரி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு குற்றவாளியை அடித்தே கொன்றதாகக் கூறி, தானே மாட்டிக்கொண்டுள்ளார் காவல் அதிகாரி ஒருவர்.

மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டிசிபி பீம்ராவ் சோனவனே. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர், தன்னிடம் சிக்கிய ஒரு கைதியை அடித்தே கொன்றுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தனது நண்பர்களிடம் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் சோனவனே வசமாக சிக்கியுள்ளார்.

குறித்த காணொளியில் சோனவனே, 1990 ஆம் ஆண்டு, நான் மும்பை வோர்லி பகுதி காவல் நிலையத்தில் பணியிலிருந்தேன். அப்போது, ரட்டு கோசவி என்ற குற்றவாளியைத் தேடிவந்தோம். அவன்மீது 27 வழக்குகள் உள்ளன.

நீண்ட வருடங்களாக அவனைத் தேடியும் கிடைக்கவில்லை. ஒருநாள், அவன் எங்கள் காவல்நிலையத்துக்கு வந்தான்.

ரட்டுவைப் பார்த்ததும், அப்போது இருந்த கோபத்தில் அவனை நாயை அடிப்பதுபோல சரமாரியாகத் தாக்கினோம்.

அவன், உடல் முழுவதும் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ரட்டு அசைவில்லாமல் கிடந்தான்.

நான்தான் அவனது கண்களைச் சோதனைசெய்தேன். அவன் இறந்துவிட்டான். பிறகு, இதைப் பற்றி காவல் நிலையத்திலிருந்தவர்களிடம் கூறினேன்.

ரட்டு இறந்ததை மறைக்க முடிவுசெய்தோம். ஆனால், காவல்நிலையத்துக்கு வெளியில் ரட்டுவின் ஆதரவாளர்கள் சுமார் 400-க்கும் அதிகமானவர்கள் இருந்தனர்.

அவனை நிற்கவைத்து, கையில் விலங்கு மாட்டி, ரட்டு உயிருடன் இருப்பது போலவே அனைத்தையும் செட் செய்து வெளியில் அழைத்துச்சென்றோம்.

அங்கிருந்தவர்களிடம், ரட்டுவுக்கு திடீர் உடல்நிலை சரியில்லை, அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என நம்ப வைத்தோம்,

பின்னர் மருத்துவமனை செல்லும் வழியில் தப்பிக்க முயன்றதாகவும், அப்போது கீழே விழுந்து இறந்ததாகவும் கூறி நம்ப வைத்தோம் என பெருமையடித்துள்ளார்.

தான் வேலைசெய்த அதே காவல்நிலையத்தில் அமர்ந்துதான் நண்பர்களிடம் இதைப் பகிர்ந்துள்ளார் சோனவனே.

2018-ம் ஆண்டு அவர் பேசிய சிசிடிவி காட்சிகளைத் தற்போது வோர்லி காவல்நிலையத்தில் அளித்துள்ளார் சோனவனேவின் உறவினரும், தொழிலதிபருமான ராஜேந்திர தாக்கர்.

சோனவனே மற்றும் தாக்கருக்கும் இடையே பண ரீதியிலான பிரச்னை இருப்பதால், வீடியோவை எடுத்துக் கொடுத்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பேசியுள்ள டிசிபி அபினாஷ், சிசிடிவி காட்சிகளை வைத்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.

அந்த நேரத்தில் என்ன நடந்தது போன்றவற்றை விசாரித்துவருகிறோம். இது தொடர்பாக புதிதாக எவரேனும் புகார் அளித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்