காதலியை சென்னைக்கு வரவழைத்து பல முறை உல்லாசம்! அதன் பின் இளைஞன் செய்த செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணுடன் பல முறை உல்லாசமாக இருந்து ஏமாறிய நபர் குறித்து காதலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு சாய்லட்சுமி என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் சாய்லட்சுமியும், அங்கிருக்கும் ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து செந்தில் குமாருக்கும் சென்னையில் வேலை கிடைக்க, அவர் சென்னை வந்துள்ளார். அதன் பின் காதலி சாய்லட்சுமியிடம், நீயும் சென்னை வந்துவிடு, இருவரும் ஒன்றாக இருக்கலாம் என்று அழைத்துள்ளார்.

காதலனின் பேச்சை நம்பி அவர் வீட்டிலிருந்த 8 பவுன் நகை மற்றும் 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்றுள்ளார்.

சென்னை வந்திறங்கிய சாய்லட்சுமியிடம், பணம் மற்றும் நகைகளை வாங்கி வைத்துக் கொண்ட, செந்தில் குமார், அதன் பின் அவரிடம் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இப்படி நாட்கள் சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் அவர் தன் காதலியிடம், நீ வீட்டிற்கு செல், நான் உங்கள் வீட்டில் வந்து பெண் கேட்கிறேன் என்று கூறி அவரை அனுப்பியுள்ளார்.

ஆனால் சொன்னபடி செந்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காமலும், திருமணம் செய்யாமலும் அவரை ஏமாற்றி வந்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி, உடனடியாக ஒத்தக்கடை காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்